பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு

விவசாயிகளுக்கு 1 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும் என, பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க தேர்தல் அறிக்கை வெளியீடு
x
டெல்லி பாஜக அலுவலகத்தில் 45 பக்க தேர்தல் அறிக்கையை, அக்கட்சித் தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வெளியிட்டனர். "சங்கல்ப் பத்ரா" எனும் பெயரிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராஜ்நாத் சிங் பேசும்போது, 75 முக்கிய அம்சங்கள் இடம் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டார். ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவதே பாஜகவின் லட்சியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை ஒடுக்குவதில் தயவு தாட்சண்யம் கிடையாது எனக் கூறப்பட்டுள்ளது. தேச பாதுகாப்பே முக்கியம், ராணுவம், போலீஸ் படைகள் நவீனமயமாக்கப்படும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நக்சல், மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜனசங்கம் காலத்தில் இருந்தே காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு குறு விவசாயிகளுக்கு பென்சன் திட்டம் கொண்டு வரப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கிராமப்புற விவசாய மேம்பாட்டுக்கு 25 லட்சம் கோடி ஒதுக்க திட்டம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டுக்குள் எல்லையில் மேலும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் உறுதி என்பது போன்ற முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. யோகாவை உலக அளவில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்