"துரைமுருகனின் பேச்சு நகைச்சுவையாக உள்ளது" - அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
x
வருமான வரி சோதனை விவகாரத்தில், ஆளும் அரசு மீதான தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் குற்றச்சாட்டு, நகைச்சுவையை ஏற்படுத்துவதாக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நுங்கம்பாக்கத்தில் மத்திய சென்னை தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணபலத்தால் அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்ற நினைப்பிற்கு மூடு விழா காணப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு  காரணமான வேலூர் தொகுதி தி.மு.க வேட்பாளரை தகுதி நீக்கம் செய்துவிட்டு, தேர்தலை நியாயமாக நடத்த வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்