2014- பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்...

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்.
2014- பாஜக தேர்தல் அறிக்கை முக்கிய அம்சங்கள்...
x
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்.

* அயோத்தியில் ராமர் கோயில் கட்ட நடவடிக்கை

* சட்டப் பிரிவு 370-ஐ திரும்பப்பெற நடவடிக்கை 

* வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் இந்தியர்களின் கருப்புப் பணம் திரும்ப கொண்டு வர நடவடிக்கை

* ஒற்றை தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும் 

* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திட்டங்கள் 

* மாநில முதல்வர்களும் பிரதமருக்கு இணையாக ஒருமித்து செயல்பட கூட்டு முயற்சி 

* முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் வரி விதிப்பில் மாற்றம்

* ஊழல் அற்ற ஆட்சியை ஏற்படுத்த நடவடிக்கை 

* விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

* நவீன தொழில்நுட்ப உதவியுடன் நாட்டின் நிர்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை

* உணவு பாதுகாப்பு திட்டத்தை திறம்பட நிர்வகிக்க நடவடிக்கை

* நேரடி அன்னிய முதலீட்டை தனியார் துறை பங்களிப்புடன் ஊக்குவிக்க நடவடிக்கை

* கல்வி, தொழிற்துறையில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம்

* வீடுகளுக்கும், விளைநிலங்களுக்கும் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை

* பெண் குழந்தைகள் பாதுகாப்பு, கல்வியை உறுதி செய்ய தேசிய அளவில் பிரசாரம் 

* 50 புதிய சுற்றுலா மையங்கள் அமைக்கப்படும்

* நாடெங்கும் ஒரே மாதிரியான கல்வித் திட்டம் கொண்டு வர நடவடிக்கை

* நாட்டில் உள்ள அனைத்து ஆறுகளையும் சுத்தப்படுத்த திட்டம்

* பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளை மேம்படுத்த நடவடிக்கை 

* கிராம சபைகளை ஒருங்கிணைத்த கொள்கைகளை உருவாக்க நடவடிக்கை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

Next Story

மேலும் செய்திகள்