வாரணாசியில் 26-ம் தேதி மோடி வேட்பு மனுதாக்கல்

வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார்.
வாரணாசியில் 26-ம் தேதி மோடி வேட்பு மனுதாக்கல்
x
வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி 26-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். உத்தரபிரதேச மாநிலம், வாரணாசி தொகுதியில் 2-வது முறையாக, அவர் போட்டியிடுகிறார். இங்கு, கடைசி கட்டமாக மே 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், 22-ம் தேதி தொடங்குகிறது. 26-ந் தேதி பிரதமர் மோடி வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். இதற்காக அவர் 25-ம் தேதி வாரணாசி செல்கிறார். அன்றைய தினமே, சாலை வழியாக மக்களை சந்தித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். 26-ம் தேதி காலை, காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு, அதன் பிறகு, பிரதமர் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்