"தீவிரவாதிகளை தாக்கினால் இங்கு சிலர் அழுகின்றனர்" - பிரதமர் நரேந்திர மோடி

தீவிரவாதிகளுக்கு அவர்களின் முறையிலேயே பதிலடி கொடுத்தால், இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகளை தாக்கினால் இங்கு சிலர் அழுகின்றனர் - பிரதமர் நரேந்திர மோடி
x
தீவிரவாதிகளுக்கு அவர்களின் முறையிலேயே பதிலடி கொடுத்தால், இங்குள்ள சிலருக்கு பிடிக்கவில்லை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அம்ரோகாவில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினாரல் இங்கு சிலர் அழுகிறார்கள் என்றும், உலகம் முன்பு பாகி​ஸ்தான் நடவடிக்கை வெளிப்பட்டு தலைகுனியும் நிலையில், இங்கு சிலர் அதற்கு ஆதரவாக குரல் எழுப்புவதாக பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை சாடினார். ஜையாத் விருது அறிவிப்புக்கு, ஐக்கிய அரபு அமீரகம் அரசு மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருது மோடிக்கான அல்ல என்றும், ஒட்டு மொத்த இந்தியர்களுக்குமானது என தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்