"காங்கிரஸ் திட்டம் அமலுக்கு வரும் போது வறுமை ஒழியும்" - நாராயணசாமி

நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில், அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் திட்டம் அமலுக்கு வரும் போது வறுமை ஒழியும் - நாராயணசாமி
x
நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில், அந்த தேர்வு ரத்து செய்யப்படும் என்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிக்கு, புதுச்சேரி முதலமைச்சர் நன்றி  தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 கோடி ஏழை குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளதன் மூலம், நாட்டில் வறுமை ஒழியும், பட்டினி என்ற நிலையே இருக்காது என்று தெரிவித்தார். மேலும், இத்திட்டம் முழுமையாக அமல்படுத்தப்படும் என்றும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதாகவும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்