சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா

சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா கர்நாடக மாநிலம் மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார்.
சுயேட்சை வேட்பாளர் ஆனார் நடிகை சுமலதா
x
சமீபத்தில் மறைந்த முன்னாள் மத்தியமைச்சர் அம்பரீஷ் மனைவி, நடிகை சுமலதா, கர்நாடக மாநிலம், மாண்டியா தொகுதியில், சுயேட்சையாக களம் இறங்கியுள்ளார். தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள அவர், மங்களூருவில் உள்ள ஷேத்ர தர்மசாலாவில் வழிபாடு நடத்தினார். சுயேட்சை வேட்பாளரான, சுமலதாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது. 

சுமலதாவுக்காக, பிரச்சாரம் செய்த புதுமணத் தம்பதி

நடிகை சுமலதாவுக்காக, புது மணத் தம்பதியர் பிரச்சாரம் செய்தனர். ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே வசித்து வரும் நாகராஜ், நடிகர் அம்பரீசின் தீவிர ரசிகர். இவருக்கும், ரேஷ்மா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. உடனே, புது மனைவியை ஏற்றிக் கொண்டு, திருமணக் கோலத்தில், இரு சக்கர வாகனத்தில் உலா வந்த நாகராஜ், சுமலதாவிற்காக பிரசாரம் செய்தார். 

Next Story

மேலும் செய்திகள்