அ.ம.மு.கவுக்கு பரிசுப்பெட்டி சின்னம் ஒதுக்கீடு

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரனின் அமமுக கட்சி வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.
x
தினகரனுக்கு குக்கர் சின்னம் வழங்க உத்தரவிட மறுத்த உச்சநீதிமன்றம், அவருக்கு பொதுச்சின்னத்தை ஒதுக்க பரிசீலனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, புதுடெல்லியில் தேர்தல் ஆணையத்திடம் தினகரன் தரப்பில் பொதுச்சின்னம் வழங்க கோரிக்கை வைக்கப்பட்டது. இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று பிற்பகல் வெளியாக உள்ள நிலையில், தினகரனின் அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது. அக்கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் ஒரே சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

"குப்புற விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை" - ஜெயக்குமார் விமர்சனம்


தினகரன் கட்சிக்கு பொதுசின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து தந்திடிவிக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இந்த சின்னம் அமமுகவிற்கு மூடு விழா என்றார். பரிசு பெட்டி சின்னத்தை பெற்றுள்ளது, குப்புறவிழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கதை என்றும் அவர் விமர்சனம் செய்தார்.

"சின்னத்தை ஓரிரு நாட்களில் மக்களிடம் கொண்டு சேர்ப்போம்" - வெற்றிவேல்


பரிசு பெட்டி சின்னம் ஒதுக்கப்பட்டது குறித்து தந்திடிவிக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்த வெற்றிவேல், கடைசி நேரத்தில் சின்னதை ஒதுக்கி, அதிமுக அரசு பின்வாசல் வழியாக தொந்தரவு கொடுப்பதாக தெரிவித்தார். இருந்தபோதும், ஓரிரு நாட்களில் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்போம் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

எந்த சின்னத்திலும் அமமுக வெற்றி பெற வாய்ப்பில்லை - அதிமுக எம்.பி வைத்திலிங்கம்


நாங்கள் கேட்ட சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது - ராஜா செந்தூர்பாண்டியன் 


Next Story

மேலும் செய்திகள்