ஏப்.2-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு

ஏப்ரல் 2ம் தேதியன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது.
ஏப்.2-ல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
x
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில் காங்கிரஸ் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே, ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்போவதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ள நிலையில், அதை காங்கிரஸ் கூட்டணி பிரசாரம் செய்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 2ம் தேதியன்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாகிறது. டெல்லியில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், தேர்தல் அறிக்கையை கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வெளியிடுகிறார். அந்த அறிக்கையில், 72 ஆயிரம் ரூபாய் அறிவிப்பு உட்பட ஏராளமான சலுகை வாக்குறுதிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்