"ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை" - ஸ்டாலின்
பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு என்றும், விவசாயிகளுக்கு ஆறாயிரம் தருவேன் என்பது மோசடி வேலை என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் திமுக வேட்பாளர் வேலுச்சாமிக்கு ஆதரவாக, ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் என்றும், மாற்றம் ஏற்பட்டால், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதே முதல் வேலை எனவும் கூறினார்.
Next Story