பிரதமர் மோடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்த ஒரே சாதனை, 84 முறை வெளிநாடு சென்று வந்தது தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
x
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து திமுக தலைவர், ஸ்டாலின் பிரசாரம் செய்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், கஜா புயல் பாதிப்பினை பல நாட்கள் கழித்து முதலமைச்சர் பழனிசாமி, ஹெலிகாப்படரில் வந்து பார்த்ததாக புகார் தெரிவித்தார். அதே சமயம், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலாக ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறை கூறினார். கடந்த 4 ஆண்டுகளாக பிரதமர் மோடி செய்த ஒரே சாதனை, 84 முறை வெளிநாடு சென்று வந்தது தான் என, திமுக தலைவர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார். மேலும்,  நம்கையில் மாநில அரசு, நாம் கை காட்டுவதே மத்திய அரசு என்ற முழக்கத்தையும் ஸ்டாலின் முன்வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்