தேர்தல் களத்தில் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சு. வெங்கடேசன்

திமுக கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ள நிலையில், மதுரை மக்களவைத் தொகுதியில் சிபிஎம் வேட்பாளராக எழுத்தாளர் சு. வெங்கடேசன் களம் இறக்கப்பட்டுள்ளார்.
x
தமிழகத்தின் முக்கிய எழுத்தாளரான, மதுரை, திருப்பரங்குன்றத்தைச் சார்ந்த சு.வெங்கடேசன் சிபிஎம் கட்சி சார்பில் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட உள்ளார்.
29 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக உள்ள அவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநில தலைவராகவும் இருக்கிறார். 2011ம் ஆண்டு இவர் எழுதிய "காவல் கோட்டம்" என்கிற நாவலுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. நான்கு கவிதை தொகுப்புகள், உட்பட 16 நூல்கள் எழுதியுள்ளார். சமீபத்தில் "வீரயுக நாயகன் வேள்பாரி" என்ற வரலாற்று நாவலையும் எழுதியுள்ளதுடன், தமிழ்மொழி தொடர்பாக பல சர்வதேச கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். கீழடி அகழாய்வு பணிகளை உலக அளவில் கொண்டு சென்றதுடன், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர் பண்பாட்டு பாதுகாப்பு இயக்கங்களில் முக்கிய பங்களிப்பை செய்துள்ளார். சிபிஎம் கட்சி சார்பில் கோவை மக்களவைத் தொகுதிக்கு பி.ஆர். நடராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் 2009ஆம் ஆண்டில் எம் பி ஆக தேர்வானார். தொழிலாளர் நலத்துறை, தகவல் தொழில் நுட்பம், தொழில்துறை ஆகியவற்றின் நிலைக்குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்