இன்றைய சூழலில் கூட்டணி அவசியத் தேவை - தமிழிசை சவுந்திரராஜன்

கூட்டணி அவசியம் தேவைப்படுவதாகவும், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்து நிற்க தயார் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
x
கூட்டணி அவசியம் தேவைப்படுவதாகவும், அனைத்துக் கட்சிகளும் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்து நிற்க தயார் என பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பாஜகவின் திட்டங்களை விளக்கி மதுரையில் இருசக்கர வாகன பேரணியை துவக்கி வைத்த அவர், முன்னதாக செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார். மகளிர் அணி சார்பில் நடைபெற்ற பேரணியில் 'வேண்டும் மோடி, மீண்டும் மோடி' முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அமித் ஷா, ரவிசங்கர் பிரசாத் ஆகியோர் நாளை தமிழகம் வருவது மகிழ்ச்சியும், உற்சாகமும் அளிப்பதாக கூறிய தமிழிசை, தமிழக அரசின் 2 ஆயிரம் ரூபாய் திட்டத்தை வரவேற்பதாக தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்