காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்?" - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை, அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்காதது ஏன் என பேரவையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
காவிரி இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடாதது ஏன்? - முதல்வர், துணை முதல்வர் ஸ்டாலினுக்கு சரமாரி கேள்வி
x
சட்டப்பேரவையில் எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினுக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஆட்சியில் இருந்த போது, காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பினை, மத்திய அரசிதழில் வெளியிட தவற விட்டதாகவும், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின், சட்டத்தின் மூலம் போராடி, அரசிதழில் வெளியிட்டதாக கூறினார். தொடர்ந்து பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு வந்த போது, மறுநாளே ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டதாக கூறினார் ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த திமுக, மத்திய அரசிதழில் தீர்ப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கவில்லை என்றார். இதனை வலியுறுத்தி, வள்ளுவர் கோட்டத்தில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்ததாகவும், பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மத்திய அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்