மு.க. ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மு.க. ஸ்டாலின் இன்று காலை டெல்லி பயணம்
x
அங்கு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியாகாந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து, மு.க. ஸ்டாலின் நேரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கிறார். வருகிற 16-ஆம் தேதி சென்னை - அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை சோனியாகாந்தியிடம் வழங்கி, மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுக்க முடிவு செய்துள்ளார். திங்கட்கிழமை காலை, டெல்லியில் ராகுல் இல்லத்தில் நடைபெறும் எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறார். பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணியை உருவாக்கும் இந்த கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வது, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்