தென்னைமரம் ஒவ்வொன்றிற்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - ஹெச் ராஜா

பாதிப்பு பகுதிகளில் மின்சார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என ஹெச்.ராஜா பாராட்டு தெரிவித்தார்.
x
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் நடந்த பவுர்ணமி கிரிவலத்தின் 17 வது ஆண்டு துவக்க விழாவில், சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கஜா புயலினால் விழுந்த தென்னை மரங்களுக்கு தமிழக அரசு அறிவித்த இழப்பீடு போதுமானது அல்ல என கூறினார்.  தென்னைமரம் ஒவ்வொன்றிற்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பாதிப்பு பகுதிகளில் மின்சார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என்றும் பாராட்டு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்