"மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை" - அமைச்சர் சண்முகம்

அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று அமைச்சர் சண்முகம் தெரிவித்தார்.
மானியக் குழுவால் தமிழகத்திற்கு பயனில்லை - அமைச்சர் சண்முகம்
x
தமிழ்நாடு குற்ற வழக்கு தொடர்பு துறை சார்பில் அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி சென்னை உயர் நீதிமன்ற வளாக கலை அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய சட்டத்துறை அமைச்சர் சண்முகம், அரசு வழக்கறிஞர்களுக்கு பயிற்சி அளிக்க  மானியக் குழு நிதி ஒதுக்கியும், 10 சதவீத நிதி அரசுக்கு வரவில்லை என்று தெரிவித்தார். இந்த பயிற்சிக்கு, தமிழக அரசு நிதி வழங்கப்படுகிறது என்றும் பேசினார். மேலும், மானியக் குழுவால் எந்த பயனும் இல்லை என்றும், அவர் குற்றம் சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்