ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு தடை - சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு பெற நீதிமன்றம் உத்தரவு...

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு பெற உத்தரவிட்டுள்ளது.
ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகள் விசாரணைக்கு தடை - சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி விலக்கு பெற நீதிமன்றம் உத்தரவு...
x
நில அபகரிப்பு மற்றும் காலரா தொடர்பாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த இந்த வழக்குகள், எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரியும் ஸ்டாலின் 
உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த  நீதிபதி பி.என்.பிரகாஷ், சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள  வழக்குகளின் விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டார். அதே சமயம், ஸ்டாலின் நேரில் ஆஜராவதிலிருந்து  விலக்கு அளிக்க மறுத்த  நீதிபதி, 2 வாரங்களில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி 5 ஆயிரம் ரூபாய்க்கான பிணை தொகையை செலுத்தி, விலக்கு பெற்று கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்