நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை

இன்று நடைபெற்ற நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி ஒன்றை மணி நேர உரை
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி உரை
x
மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர் மோடி பதிலுரை.

* பெரும்பான்மை மிக்க இந்த அரசின் மீது நம்பிக்கை வையுங்கள் - பிரதமர் மோடி.

* நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிராகரியுங்கள் - பிரதமர்

* எங்கள் அரசு மீது நேரடியாக குற்றம்சாட்டுங்கள், நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வேண்டாம் - பிரதமர்

* பிரதமராக வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒருவர், என்னை அந்த நாற்காலியில் இருந்து இறக்க ஆசைப்படுகிறார், எதற்கு இந்த அவசரம்? - பிரதமர் மோடி கேள்வி.

* எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அதிகாரப் பசியுடன் உள்ளனர் - பிரதமர் மோடி.

* எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் அதிகாரப் பசியுடன் உள்ளனர்- பிரதமர் மோடி

* 18 ஆயிரம் கிராமங்களுக்கு அரசு மின்வசதி செய்து கொடுத்துள்ளது, முந்தய காங். அரசு மின்வசதி தொடர்பாக எதையும் செய்யவில்லை - பிரதமர்

* பெண்களுக்காக நாடு முழுவதும் 8 கோடி கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது- பிரதமர் மோடி

* எனது அரசின் திட்டங்களால் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள 30 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர் - பிரதமர்

* ஏழைகளுக்கு ஆயுள் காப்பீட்டு வசதியை அதிகரித்துள்ளோம் - பிரதமர்

* கருப்பு பணத்திற்கு எதிரான எங்கள் போராட்டம் தொடர்கிறது - பிரதமர்

* விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக முயற்சித்து வருகிறோம் - பிரதமர்     

* உலகில் மிக வேகமாக பொருளாதார வளர்ச்சிபெறும் நாடுகளில், இந்தியா 6-வது இடத்தை பிடித்துள்ளது - பிரதமர்

* எங்கள் மீது நாட்டு மக்களுக்கும், உலக நாடுகளுக்கும் நம்பிக்கை இருக்கிறது, ஆனால், தங்கள் மீதே காங்கிரசுக்கு நம்பிக்கை இல்லை - பிரதமர்

* நாட்டின் பாதுகாப்பு மீதா நாங்கள் விளையாடுவோம்? - ரஃபேல் விமான விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம்.

* எந்த ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறீர்கள், இனியாவது நீங்கள் திருந்த வேண்டும் - பிரதமர்

* 2022-ம் ஆண்டும் எங்கள் அரசு மீது நீங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர ஆண்டவனை வேண்டுகிறேன் - பிரதமர்.

* எங்களுக்கு வேலை இருப்பதால், உங்கள் கண்களை பார்க்க நேரமில்லை - ராகுல் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதில்.

* மக்களவையில் ராகுல் காந்தி கண் சிமிட்டியது உலகம் முழுவதும் சர்ச்சையாகி வருகிறது - பிரதமர்

* நாங்கள் நாட்டின் பாதுகாவலர்கள், உங்களை போல வியாபாரிகள் அல்ல - பிரதமர்

* நாட்டின் முன்னேற்றத்திற்கான புது பாதையை அமைத்துள்ளோம் - பிரதமர்

* ஒரு குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக நாட்டின் எதிர்காலத்தை வீணடித்துவிட்டீர்கள் - பிரதமர் மோடி

* ஆந்திராவை இரண்டாக பிரித்து பிரிவினையை உருவாக்கிவிட்டீர்கள் - காங். மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

* அதனால் தான் கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது - பிரதமர் மோடி

* ஆந்திராவும், தெலங்கானாவும் வளர்ச்சி அடைய வேண்டுமென காங். ஒருபோதும் நினைத்ததில்லை - பிரதமர்

* ஆந்திர மாநிலத்திற்கு என ஒரு சிறப்பு திட்டத்தை தயாரித்துள்ளோம் - பிரதமர் மோடி

* அந்த திட்டத்தின் அடிப்படையில் தான் ஆந்திர அரசு தற்போது பலன்களை அனுபவித்து வருகிறது - பிரதமர் மோடி

* ஆந்திர மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதில் இருந்து மத்திய அரசு ஒருபோதும் பின்வாங்காது - பிரதமர் மோடி

* ஜிஎஸ்டி விவகாரத்தில் மாநில அரசுகளின் கருத்துக்களை ஏற்க காங்கிரஸ் மறுத்தது - பிரதமர் மோடி.

* நாங்கள் மாநில அரசுகளின் கருத்தை கேட்டு ஜிஎஸ்டியை நிறைவேற்றி உள்ளோம் - பிரதமர் மோடி.

* வாராக்கடன்களை வசூலிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் மோடி

* காங்கிரஸின் தவறான நிர்வாகத்தால் வாராக்கடன்கள் அதிகரித்தன - பிரதமர் மோடி

* வாராக்கடன்களை வசூலிக்க பல திட்டங்களை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் மோடி

* காங்கிரஸின் தவறான நிர்வாகத்தால் வாராக்கடன்கள் அதிகரித்தன - பிரதமர் மோடி

* மகாத்மா காந்தியின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து வருகிறோம் - பிரதமர் மோடி

* காங்கிரஸ் ஆட்சியின் போது வாங்கப்பட்ட வெளிநாட்டு கடன்களை எல்லாம் நாங்கள் திருப்பி செலுத்தி வருகிறோம் - பிரதமர் மோடி

Next Story

மேலும் செய்திகள்