ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு

தமிழகத்தில் ஆளுநர் அடுத்த சுற்றுப்பயண ஆய்வை தொடர்ந்தால், தாமே கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.
ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன் - ஸ்டாலின் ஆவேசப் பேச்சு
x
"ஆளுநர் ஆய்வை தொடர்ந்தால் கருப்பு கொடி காட்டுவேன்"கரூரில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாணவரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய - மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும், குடியரசுத்தலைவரிடம் கிடப்பில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சியை பாதுகாக்க ஆயுள் தண்டனையை கூட அனுபவிக்க தயார் என்றார்.Next Story

மேலும் செய்திகள்