திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் திடீர் பேரணி

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஆளுநர் மாளிகை நோக்கி ஸ்டாலின் திடீர் பேரணி
x
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியினர் ஆளுநர் மாளிகையை நோக்கி திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்லுக்கு நேற்று சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எதிராக திமுகவினர் கறுப்பு கொடி போராட்டம் நடத்தினர். இதையடுத்து, 192 தி.மு.க.வினர் மீது ஆளுநரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார், பின்னர் அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று,கட்சியினருடன் ஆளுநர் மாளிகையை நோக்கி  முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டார். சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்ட அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அப்போது ஆளுநருக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில், ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் அனைவரையும்  போலீஸார் கைது செய்தனர்.

திமுகவினரை கைது செய்ததற்காக போராட்டம் நடத்தவில்லை, ஆளுநரின் செயலை கண்டித்தே முற்றுகையில் ஈடுபட்டோம். மேலும் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என ஸ்டாலின் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்