கேரளாவில் "ஜிகா வைரஸ்" - 100 பேருக்கு காய்ச்சல்.. பகீர் கிளப்பும் ரிப்போர்ட்

x

கேரளாவில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கண்ணூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் உட்பட 100 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூரிலுள்ள தலச்சேரியில் ஒரே கட்டிடத்தில் மூன்று நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. இங்கு, ஒருசில வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, மருத்துவக் குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளவர்களுக்கு பரிசோதனை நடத்தினர். அவர்களிடம் இருந்து ரத்தம், உமிழ்நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆலப்புழா வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கும் ஜிகா வைரஸ் இருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ள நிலையில், முழுமையான ஆய்வு முடிவுக்குப் பிறகே உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்