பாரத் மண்டபத்தில் உலக தலைவர்கள் - "இந்த மாநாடு மேலும் வலு சேர்க்கும்" - பிரதமர் மோடி உறுதி

x

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்கும் நிலையில், இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர்...

மாநாட்டையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வரலாற்று சிறப்புமிக்க பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ள 18வது உச்சி மாநாட்டை இந்தியா நடத்துவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அடுத்த இரண்டு நாட்களில் உலக நாடுகளின் தலைவர்களுடன் ஆக்கப் பூர்வமான விவாதத்தை எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களை மையப்படுத்திய உள்ளடக்கிய வளர்ச்சிக்கு டெல்லியில் நடைபெறும் உச்சி மாநாடு புதிய பாதை வகுக்கும் எனவும் இந்தியாவின் விருந்தோம்பலை, சிறப்பு விருந்தினர்கள் ரசிப்பார்கள் என தான் நம்புவதாகவும் இந்த தனிப்பட்ட சந்திப்பானது, நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதியளித்தார்.

ஜி-20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஜோ பைடன், பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டனர். சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கும், ஆதித்யா விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியதற்காகவும் பிரதமர் மோடிக்கு ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க ஆதரவளிக்கும் என்று பிரதமர் மோடியிடம் மீண்டும் உறுதியளித்த அதிபர் பைடன், வரும் 2028-29-இல் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா போட்டியிடுவதற்கும் வரவேற்பு தெரிவித்தார். அப்போது, அடுத்த ஆண்டு, இந்தியாவில் நடைபெறும் குவாட் நாடுகளின் மாநாட்டிற்கு அமெரிக்க அதிபர் பைடன் வரவேண்டும் என்று பிரதமர் மோதி அழைப்பு விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்