மகளிர் ப்ரீமியர் லீக் போட்டி.. களமிறங்கும் 5 அணிகள்

x

மகளிர் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்க உள்ளது.

ஐபிஎல் தொடரைப்போல வீராங்கனைகளுக்கான டி20 கிரிக்கெட் தொடர், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கி அடுத்த மாதம் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மும்பை, டெல்லி, குஜராத், உத்தரப்பிரதேசம், பெங்களூரு ஆகிய ஐந்து அணிகள் இதில் பங்கேற்கின்றன. இன்று இரவு 8 மணியளவில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை அணியும், மெக் லேனிங் தலைமையிலான டெல்லி அணியும் மோதவுள்ளன. பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய இரு நகரங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இறுதிப்போட்டி வருகிற மார்ச் 17ம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்