கூட்டணிக்கு "இந்தியா" பெயர் ஏன்? - 26 எதிர்க்கட்சிகளுக்கு பறந்த உத்தரவு

x

"இந்தியா" என்ற பெயரை எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு தொடர்பாக பதில் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உள்ளிட்டவைகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Vovt

கிரிஷ் பரத்வாஜ் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் விசாரித்தது. அப்போது அரசியல் லாப நோக்கங்களுக்காகவும், அப்பாவி மக்களின் வாக்குகளை பெறும் நோக்கத்திற்காகவும், "இந்தியா" என்ற பெயரை கூட்டணிக்கு வைத்து எதிர்க்கட்சிகள் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது அரசியல் வன்முறைக்கு இட்டுச் செல்லும் என்றும், இந்தியா என்ற பெயரை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிமன்றம், இந்த மனு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம், தகவல் ஒளிபரப்பு அமைச்சகம், இந்திய தேர்தல் ஆணையம், 26 எதிர்க் கட்சிகள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 31ம் தேதிக்கு தள்ளி வைத்தது.


Next Story

மேலும் செய்திகள்