instant loan appல் காத்திருக்கும் `ஆப்பு'.. முகம் போதும் Dress இல்லாமல் மார்பிங் - பறிபோகும் பணம்

x

புதுச்சேரியில் instant loan app கடன் செயலி மூலம் 15 ஆயிரம் கடன் வாங்கிய அரசு ஊழியரின் புகைப்படத்தை நிர்வாணமாக மார்பிங் செய்து மிரட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி அரசு மருத்துவ குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் அரசு ஊழியர் அந்தோணி ராஜ், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் instant loan app செயலி மூலம் 15 ஆயிரம் கடனுக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால்

7 ஆயிரம் ரூபாய் மட்டுமே அவருடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளனர். அந்த பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி கட்டிய நிலையில், 15 ஆயிரம் ரூபாய் பணத்தையும் கட்டவேண்டும் என மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அவரது

வாட்ஸப்பில் முகப்பு படத்தை மார்பிங் செய்து நிர்வாண புகைப்படத்தை அனுப்பியுள்ளனர். இது குறித்து, சைபர் க்ரைம் போலீசாரிடம் அந்தோணிராஜ் புகார் அளித்துள்ளார். அதில் இணைய வழி மூலம்,

2 லட்சத்து 81 ஆயிரம் பணத்தை மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து, சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்