இந்தியாவுக்கு எச்சரிக்கை..! காத்திருக்கும் அதிபயங்கர அபாயம்... | India | UN

x

2025ல் வட மேற்கு இந்தியாவில் நிலத்தடி நீர் வெகுவாக

குறைந்து விடும் என்று ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.

அது குறித்த விவரங்களை இந்த தொகுப்பு அலசுகிறது.

இந்த ஆறு விஷயங்களில் மீண்டு வர முடியாத புள்ளியை உலகம் நெருங்கி வருவதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் குறைதல் குறித்த ஆய்வில், இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் 78 சதவீத கிணறுகளில், நிலத்தடி நீர் அதீத அளவுக்கு சுரண்டப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த வட மேற்கு பகுதியில், 2025ல் நிலத்தடி நீரின் அளவு வெகுவாக குறைந்து விடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐ.நா.வின் பேரிடர்கள், ஆபத்துகள் அறிக்கை 2023

என்ற தலைப்பில், ஐ.நா பல்கலைகழகத்தின் சுற்றுச்சூழல்

மற்றும் மானிட பாதுகாப்பு நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை

வெளியிட்டுள்ளது.

வேகம் பெற்று வரும் உயிரினங்கள் அழிவு, நிலத்தடி நீர் குறைதல், மலைகளில் பனிகட்டி ஆறுகள் உருகுவது, அதீத வெப்பம், விண்வெளி குப்பைகள், நிச்சயமற்ற எதிர்காலம் ஆகிய ஆறு பிரிவுகளில் சுற்றுச்சூழல் ஆபத்துகள் பற்றி

ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள், இந்தியாவின் அரிசி

உற்பத்தியில் 50 சதவீதத்தையும், கோதுமை உற்பத்தியில்

85 சதவீதத்தையும் அளிக்கின்றன.

இங்கு நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்தால், இந்தியாவின் உணவு தானிய உற்பத்தி கடுமையாக பாதிக்கபடும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

உலகில் உள்ள நல்ல நீரில், 30 சதவீதம் நிலத்தடி நீராக

சேமிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீரை சேமித்து வைத்துள்ள பாதாள படுகைகளில் இருந்து உறுஞ்சப்படும் நீரில் 70 சதவீதம் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது.

உலக அளவில், 50 சதவீதத்திற்கும் அதிகமான பாதாள படுகைகளில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு, அவற்றில் சேரும் நீரின் அளவை விட அதிகமாக உள்ளது.

இதனால் நிலத்தடி நீரின் மட்டம், குறிப்பிட்ட அளவிற்கு கீழே செல்லும் போது, கிணறுகள் நிரந்தரமாக வற்றி, பயனற்றதாக மாறிவிடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலத்தடி நீர் பயன்பாட்டில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த பயன்பாட்டை விட இந்தியாவின் பயன்பாடு அதிகமாக உள்ளது குறிப்பிடத் தக்கது.


Next Story

மேலும் செய்திகள்