உ.பியில் தேர்தலை சந்தித்த பாஜக வேட்பாளர் திடீர் உயிரிழப்பு

x

உத்தரபிரதேசத்தில், தேர்தலை சந்தித்த பாஜக வேட்பாளர் திடீரென உயிரிழந்தார். மொரதாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட 71 வயதான கன்வர் சர்வேஷ், உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமையன்று உயிரிழந்தார். வெள்ளிக்கிழமையன்று, மொராதாபாத் மக்களவைத் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், ஒருவேளை அவர் வெற்றி பெற்றாலும் உடனடியாக அந்த தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தொழிலதிபரான கன்வர் சர்வேஷ் உத்தரப்பிரதேச பாஜகவில் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டவர்.


Next Story

மேலும் செய்திகள்