6 வயது சிறுமியை சுற்றி வளைத்து குதறிய தெருநாய்கள்... பதற வைக்கும் சிசிடிவி காட்சி

x

உத்தரப் பிரதேச மாநிலம் மண்டி தனவுராவின் மொஹல்லா கத்ராவில் 6 வயது சிறுமியைத் தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... ஆசிப் அலியின் ஆறு வயது மகள் ஹனியா வீட்டில் இருந்து சந்தைக்குச் சென்ற போது, வழியில் இருந்த தெருநாய்கள் கூட்டம் திடீரென ஹனியாவை சூழ்ந்து கடித்துக் குதறின. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினரைக் கண்டு தெருநாய்கள் ஓடின... இக்காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தெருநாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்