பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பதிவிட்ட ஒரே டுவிட் - திரும்பிய இந்தியாவின் கவனம்

x

பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரி, மாநில அமைச்சரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில்,

நாட்டிலேயே முதன்முறையாக நடைபெற்ற சாதி வாரி

கணக்கெடுப்பு அடிப்படையில், பீகாரில் அனைத்துப் பிரிவினரும் சேர்த்து சுமார் 94 லட்சம் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.அந்த குடும்பங்களில் ஒருவருக்கு வேலைவாய்ப்பிற்காக 2 லட்சம் வரை தவணை முறையில் வழங்கப்படும் என்றும், வீடு மற்றும் நிலமற்ற 63 ஆயிரத்து 850 குடும்பங்களுக்கு நிலம் வாங்குவதற்கு வழங்கப்பட்டு வந்த 60 ஆயிரம் ரூபாய் வரம்பு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இது போன்ற திட்டங்களைச் செயல்படுத்த சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும், இப்பணிகளுக்கு பெரும் தொகை தேவைப்படுவதால், 5 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசால் பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கிடைத்தால், இப்பணியை மிகக் குறுகிய காலத்தில் செய்து முடிப்போம் என்றும் முதலமைச்சர் நிதீஷ் குமார் பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்