காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (13-03-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
  • குஜராத், அசாம் மாநிலங்களில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் மூன்று செமி கண்டெக்டர் ஆலைகள்... பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்...
  • கோவை மாவட்டம் ஆச்சிப்பட்டியில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின்... 25 ஆயிரம் பேருக்கு நலத்திட்டங்களை வழங்கி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்...
  • தேர்தல் பத்திர விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தது, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா... தேர்தல் பத்திர தரவுகளை வரும் 15ம் தேதி இணையதளத்தில் வெளியிடுகிறது இந்திய தேர்தல் ஆணையம்...
  • மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 2வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... 43 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால்...
  • தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை, திண்டுக்கல் தொகுதிகளில் போட்டி... இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மீண்டும் திருப்பூர், நாகை தொகுதிகள் ஒதுக்கீடு...
  • பா.ஜ.க. மற்றும் பா.ம.க. இடையே கூட்டணி முடிவானதாக தகவல்... கூட்டணி தொடர்பாக இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பு...
  • அண்ணாமலை முன்னிலையில், சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜ.க. உடன் இணைத்தார் சரத்குமார்... சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க விரும்பவில்லை என்று, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தகவல்...
  • சென்னையில் பாஜக உடன் அமமுக முதல்கட்ட பேச்சுவார்த்தை... தங்களுக்கான தொகுதிகளைக் கேட்டுள்ளதாகவும், பா.ஜ.க. உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேட்டி...
  • பா.ஜ.க. உடனான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி... இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் எனவும் திட்டவட்டம்...
  • மகளிர் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், மும்பை அணியை பந்தாடிய பெங்களூரு அணி... ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி...
  • இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் முழு உடல் தகுதியை எட்டியுள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட வாய்ப்பு...

Next Story

மேலும் செய்திகள்