மீண்டும் சிறுத்தை,கரடி நடமாட்டம்.. பக்தர்களை எச்சரித்த திருப்பதி தேவஸ்தானம் | Tirupati

x

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக செல்லும் அளிப்பிரி நடைபாதை அருகே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, சிறுத்தைகள் ஒரு சிறுவனை தாக்கி காயப்படுத்தி விட்டு சென்றன. மற்றொரு சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து வனத்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 6 சிறுத்தைகள் பிடிப்பட்டன. இந்நிலையில், கடந்த 24 மற்றும் 27-ஆம் தேதிகளில், நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்மசுவாமி கோவில் அருகே சிறுத்தை, கரடி நடமாட்டம் இருப்பது கேமராக்களில் பதிவாகியுள்ளது. எனவே, திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் குழுக்களாகவும், பாதுகாப்புடனும் எச்சரிக்கையுடனும் செல்ல வேண்டும் என்ற தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்