"சபரிமலையில் இனிமேல் இதற்கு தடை.." - வெளியான அதிரடி அறிவிப்பு

x

சபரிமலை வனப்பகுதிகளில் கூடாரம் அமைத்து தங்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகர விளக்குப் பூஜையை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த போலீசார் மற்றும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தரிசனம் முடிந்து உடனடியாக மலையிறங்க வேண்டும் என்றும், மகர ஜோதியை காண மரங்களில் ஏறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வனப்பகுதியில் விலங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது, வனப்பகுதியை கழிப்பிடமாக பயன்படுத்தக்கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்