"இது பாஜக கொடுக்கும் லாலிபாப்" - காங். தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்

x

சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நேரத்தில் பாஜக கொடுக்கும் 'லாலிபாப்' என காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். 400 ரூபாய் சிலிண்டரை ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்று சாமானிய மக்களின் வாழ்க்கையை சிதைத்தபோது, இந்த பாச பரிசு நினைவுக்கு வரவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், தேர்தல் நேரத்தில் 'லாலிபாப்' அளிப்பது பாஜகவுக்கு பலன் அளிக்காது என தெரிவித்துள்ளார். பாஜகவின் பத்தாண்டுகால பாவங்களை குறைக்க முடியாது என்ற அவர், 200 ரூபாய் மானியம் மக்களின் கோபத்தை தணிக்காது என்றும் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்