குட்டி யானையிடம் செல்லமாக கொஞ்சி விளையாடிய மாணவர்கள்.. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற வனத்துறையினர்

x

குட்டி யானையிடம் செல்லமாக கொஞ்சி விளையாடிய மாணவர்கள்.. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற வனத்துறையினர்

ஊருக்குள் வழி தவறி புகுந்த யானை குட்டி ஒன்று பள்ளி மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்த சுவாரசிய சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறி உள்ளது. கர்நாடகா மாநிலம் பூரணிப்போடு

கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியிலிருந்து, ஆறு மாத யானை குட்டி ஒன்று வழித்தவறி, அக்கிராமத்திற்குள் நுழைந்தது. அவ்வூரின் அரசு பள்ளிக்கு அருகே சுற்றி திரிந்த அந்த யானை குட்டி,

பள்ளி மாணவர்களுடன் விளையாடி மகிழ்ந்தது. பின்னர் யானை குட்டிக்கு உணவு அளித்த அப்பகுதி மக்கள், யானை குட்டி ஊருக்குள் வந்தது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல்

தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த வனத்துறையினர், யானை குட்டியை பத்திரமாக மீட்டு, அதன் தாயிடம் சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்