பெத்த வயிற்றில் தீயை அள்ளி கொட்டிய மகன்..கண்ணீரோடு நீதிமன்றம் சென்ற தாய்.. அடித்து சொன்ன நீதிபதி

x

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திலுள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த தம்பதிகளில் கணவருக்கு 93 வயது. இவர், மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவிக்கு 80 வயதாகிறது. இவர்களின் மகனுக்கும் தாயாருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக தாயாருடன் வாழ விரும்பாததால் தனது தந்தையை மட்டும் அழைத்து கொண்டு சென்றுவிட்டார். இந்நிலையில் நெய்யாற்றிகரையில் உள்ள வீட்டில் மூதாட்டி மட்டும் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் தனது கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கக்கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தம்பதியை, ஒருவரிடமிருந்து மற்றொருவரை விலக்கி வைக்க குழந்தைகளுக்கு உரிமை இல்லை என தீர்ப்பில் கூறினார். நெய்யாற்றின் கரையில் உள்ள வீட்டில் மூதாட்டி தமது கணவருடன் விருப்பப்படி வாழலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தாய் சம்மதித்தால் மகன் தங்கலாம் அல்லது வீட்டிற்கு செல்லலாம் என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்