கேரளாவில் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்-அவல நிலையில் கடவுளின் தேசம்-உதவிக்கரம் நீட்டும் Ex-MP

x

முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் 92 வயது மூதாட்டியும் அவரது மகளும் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு கட்டில் போட்டு போராட்டம் நடத்திய நிலையில், அவர்களுக்கு நடிகர் சுரேஷ் கோபி உதவிக்கரம் நீட்டியுள்ளார்...

கேரளாவில் கடும் நிதி நெருக்கடியால் பல்வேறு துறையினருக்கு மாத ஊதியம் கால தாமதமாகவே வழங்கப்படுகிறது. கைம்பெண், முதியோர் உள்பட அனைத்து பென்ஷன்களும் கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இவ்விவகாரம் விஷ்வரூபம் எடுத்துள்ளது... இடுக்கி அடிமாலி அருகே 87 வயது மூதாட்டி மரியகுட்டி கடந்த நவம்பரில் மண் சட்டி ஏந்தி யாசகம் பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியது... எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்கினர்... இந்நிலையில் வண்டி பெரியாறைச் சேர்ந்த 96 வயது மூதாட்டி பொன்னம்மா சாலை மறியல் செய்தார்... அடிமாலி அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும் குழாமாம் குழி குடியைச் சேர்ந்த 72 வயது சிவதாசன் இவரது மாற்றுத்திறனாளி மனைவி ஓமனா ஆகியோர் கருணை கொலைக்கு தயார் என பெட்டிக்கடையில் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்... இவர்களைப் போலவே 92 வயதான தாய் பத்மாவதி மற்றும் அவரது 67 வயது மகள் இந்திரா இருவரும் ஓய்வூதியம் இல்லாததால் மருந்து, உணவு கிடைப்பதில்லை என கூறி அகத்தேதாரா பஞ்சாயத்து அலுவலகத்தின் வெளியே, கட்டில் போட்டு இருதினங்களாக போராட்டம் நடத்தினர்... மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாத நிலையில் நடிகரும், முன்னாள் பாஜக எம்.பியுமான சுரேஷ் கோபி அரசு ஓய்வூதியம் வழங்கும் வரை தான் உதவுவதாக உதவிக்கரம் நீட்டி போராட்டத்தைக் கைவிட கோரியுள்ளார்... ஓய்வூதிய பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பெரும்பிரச்சினையாக்கி அரசுக்கு தலைவலியைக் கொடுத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்