திடீரென பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்... மாயமான 23 ராணுவ வீரர்கள்..! தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை

x

சிக்கிம் லோனாக் ஏரி பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டு அதீத மழை பெய்தது. தீஸ்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மங்கன், கேங்டாக் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளதாக, அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ராணுவத்தினர் 23 பேர், பொதுமக்கள் உட்பட 102 பேர் காணாமல் போயுள்ளதாகவும், தேடுதல் பணி தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள், சிக்கிமின் பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்து வருகின்றனர். டீஸ்டா அணைப்பகுதியில் பணியாற்றி வந்த 14 தொழிலாளர்கள், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே, மீட்பு நடவடிக்கைகள் தொடர்வதாக சிக்கிம் அரசு தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்