104 அடி உயரத்தில் பறந்த தேசிய கொடி.. மெய்மறந்து ரசித்த சுற்றுலா பயணிகள்

x

வடக்கு காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில், 104 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. குப்வாரா மாவட்டம் டீத்வாலில் உள்ள கர்னா பள்ளத்தாக்கு, சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இப்பகுதியை மேம்படுத்த, சமூக அமைப்புகளுடன் இந்திய ராணுவம் ஒன்றிணைந்துள்ளது. டீத்வால்-சிலியன் எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, 104 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டுள்ளது. இதையொட்டி திரங்கா கோப்பை கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்