பௌலிங் போட்ட மாற்றுத்திறனாளி சிறுவன் பேட்டிங் செய்த சஞ்சு சாம்சன் கனவுக்கு உயிர் கொடுத்த தருணம்

x

கை, கால்கள் ஊனமுற்ற 11 வயது சிறுவனின் ஆசையை, இந்திய கிரிக்கெட் வீரர் ச​ஞ்சு சாம்சன் நிறைவேற்றி உள்ளார். நெகிழ்ச்சியான இந்தச் சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் யாசின். கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் தீவிர ரசிகர். கீ போர்டு வாசிப்பதிலும் தனித்திறமை கொண்ட யாசின், கண்களை கட்டிக் கொண்டு தேசிய கீதத்தை வாசித்து ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இந்நிலையில் அவர் சஞ்சு சாம்சனை நேரில் பார்க்க வேண்டும், அவருடன் கிரிக்கெட் விளையாட வேண்டும் என சமூக வலைதளத்தில் தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். இதனை அறிந்த சஞ்சு சாம்சன், சிறுவன் யாசினுக்கு வீடியோ கால் மூலம் பேசி, தான் கேரளா வரும் பொழுது, விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதாக தெரிவித்தார். அதன்படி, மலப்புரம் மாவட்டத்திலுள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றில் வைத்து சஞ்சு சாம்சன் சிறுவன் யாசினை சந்தித்தார். அப்போது, சிறுவன் யாசினுடன் கிரிக்கெட் விளையாடிய சஞ்சு சாம்சன், அவருக்கு தொப்பியை பரிசாக வழங்கினார். நெகிழ்ச்சியான இந்த செயலைக் கண்டு பலரும், சஞ்சு சாம்சனை பாராட்டி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்