இங்கிலாந்து பயிற்சியாளராக களம் இறங்கும் அதிரடி மன்னன் | Kieron Pollard | T20 Cricket World Cup 2024

x

2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக, மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் கிரன் பொல்லார்டு நியமிக்கப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை போட்டிகள், அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணிக்கு, பொல்லார்டு துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் சூழல் குறித்து நிபுணத்துவத்தை அளிப்பதற்காக, அவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்