தமிழகத்திலிருந்து தெலுங்கானாவிற்கு படையெடுத்த 2000 வீர‌ர்கள்

x

தெலங்கானா நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக சென்னையில் இருந்து 2000 ஊர்க் காவல் படை வீரர்கள் புறப்பட்டு சென்றனர். தெலுங்கானா மாநிலத்தில் வரும்13ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, சென்னையில் பணியாற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் ஆயிரம் பேர், எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து, தெலங்கானாவில் இருந்து வந்த 23 பேருந்துகள் மூலம் சங்காரெட்டி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதே போன்று, பிற மாவட்டங்களை சேர்ந்த ஆயிரம் ஊர்க்காவல்படையினர், வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இருந்து, 23 பேருந்துகள் மூலம், சூர்யா பேட்டை மாவட்ட தேர்தல் பணிக்கு சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்