ஸ்பைடர்மேன்,சூப்பர்மேன் வரிசையில் பென் மேன்.."அத்தனையும் இங்க தான் இருக்கு போல"

x

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரை சேர்ந்த ஒருவர், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேனாக்களை சேகரித்துள்ளார். ஒடிசாவின் பென் மேன் என அழைக்கப்படும் 47 வயதாகும் துஷார் காந்த தாஸ், சிறு வயது முதலே பேனாக்களை சேகரிக்கும் ஆர்வத்தை கொண்டிருந்தார். உறவினர்கள் எங்கு சென்றாலும், தனக்கு பேனா ஒன்றை வாங்கி வரச் சொல்லிவிடுவார். ரெனால்ட்ஸ் முதல் பார்க்கர் வரை அனைத்து விதமான பென்களும், வெளிநாட்டுப் பேனாக்களும் இவரிடம் உள்ளன. 5 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான பேனாக்களை காட்சிப்படுத்தியுள்ளார். 10 ஆயிரம் பேனாக்கள் சேகரிப்பதை தனது லட்சியமாக கொண்டிருப்பதாக, பென் மேன் துஷார் காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்