சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு - பக்தர்களுக்கு நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு

x

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து தீபாரதனை காட்டி, ஆழிக்குண்டத்தில் தீ மூட்டினார், தொடர்ந்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இன்று முதல் 18ம் தேதி வரை வழக்கமான பூஜைகளுடன், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. 18ம் தேதி இரவு கோயில் நடை அடைக்கப்படவுள்ளது. கோயிலில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் மற்றும் பம்பையில், உடனடி முன்பதிவு கவுண்டர்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்