சபரிமலை.. மத்திய அமைச்சர் பரபரப்பு தகவல்

x

கேரள அரசு ஒத்துழைக்காததால், சபரிமலை ரயில் திட்டம் பல ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் இன்றி கிடப்பில் உள்ளதாக, ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.மக்களவையில் கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ், சபரிமலை கோயிலுக்கு ரயில் பாதையை அமைப்பது தங்களது முக்கியமான திட்டம் என்றும். நிலம் கையகப்படுத்துதல் மற்றும் நிதியை வழங்குவதில், கேரள அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், சபரிமலை ரயில் திட்டம் பல ஆண்டுகளாக எந்த முன்னேற்றமும் அடையாமல் கிடப்பில் உள்ளதாகவும் குற்றம் சாட்டினார். 2 மாற்று வழித்தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுவதாகவும், ஒரு வழித்தடத்தில், ரயில் பாதையை சன்னதிக்கு மிக அருகில் கொண்டு செல்லவும், மற்றொன்றில் சந்நிதிக்கு சுமாா் 25 முதல் 26 கிலோமீட்டர் முன்பு ரயில் பாதை முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். முழுமையாக ஆய்வு செய்யப்பட்டதும் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். செங்கனூா் முதல் பம்பை வரையிலான புதிய வழித்தடத்துக்கு விரிவான திட்ட அறிக்கை தயாா் நிலையில் உள்ளதாகவும் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்