தமிழகம் to ஸ்ரீலங்கா.. ரூ.110 கோடி `ஹசிஸ்'.. 814Kg கஞ்சா.. இன்டெர்நேஷனல் லெவலில் சிக்கும் புள்ளிகள்?

x

இறால் பண்ணையிலிருந்து இலங்கைக்கு 110 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற வழக்கில் தேடப்படும் குற்றவாளி இலங்கை தப்பிச் சென்றதாக துப்பு கிடைத்துள்ளது...

கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் சோதனை செய்தபோது அங்கு 110 கோடி ரூபாய் மதிப்பிலான 100 கிலோ ஹசிஸ் என்ற போதை பொருள் மற்றும் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 814 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது... இதனை தொடர்ந்து இறால் பண்ணையில் காவலாளியாக பணியாற்றி வந்த முஜிபூர் ரஹ்மானிடம் விசாரணை நடத்தப்பட்டது... தொடர்ந்து இறால் பண்ணை உரிமையாளர் ராமநாதபுரம் ஆர்.எஸ் பட்டினத்தைச் சேர்ந்த சுல்தான் என்பவரைக் கைது செய்ய போலீசார் அங்கு விரைந்த போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் புதுக்கோட்டை அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சுங்கத்துறை அதிகாரிகளால் ஒப்படைக்கப்பட்டன... தலைமறைவாகியுள்ள சுல்தான் இலங்கை தப்பிச் சென்றதாகத் தகவல் கிடைத்துள்ள நிலையில், அவரை அங்கேயே வைத்துப் பிடிக்க சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. மேலும் இக்கடத்தல் விவகாரத்தில் சர்வதேச முக்கியப் புள்ளிகளும் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்