லிவ் இன் உறவில் பெண் பிரிந்ததால் ஆத்திரம் - கொடூரத்தின் உச்சத்திற்கு சென்ற நபர்... இணையத்தில் பரவிய போட்டோஸ்

x

புதுச்சேரியை சேர்ந்த பெண் ஒருவரின் கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், மறுமணத்திற்காக, திருமண தகவல் மையத்தில் பதிவு செய்துள்ளார். அதனைப் பார்த்த புதுக்கோட்டையை சேர்ந்த ஞானசேகர் என்பவர், தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். அவரை நம்பிய அந்தப் பெண், புதுக்கோட்டையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். இதனை அறிந்த ஞானசேகரின் மனைவி வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபடவே, அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார். ஞானசேகருக்கு இன்னும் முதல் மனைவியுடன் விவகாரத்து ஆகவில்லை என தெரியவரவே, அவரை விட்டு அந்தப் பெண் பிரிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஞானசேகர், அந்தப் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்டபெண் அளித்த புகாரின் பேரில், ஞானசேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்