"நான் ஏழை மக்களின் பணத்தைப் பற்றியே கவலைப்படுகிறேன்".. உடைத்து பேசிய பிரதமர் மோடி

x

கறுப்பு பணத்தை பிடிப்பதால் எதிர்க்கட்சிகள் என்னை அவதூறு செய்கின்றன என்று, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஆந்திரா மாநிலம் ராஜமுந்திரியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரசும் அதன் இந்தியா கூட்டணியும், ஒவ்வொரு நாளும், அமலாக்கத்துறை அமலாக்கத்துறை என தொடர்ந்து உரக்க கத்தி கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் அமைச்சர் செயலாளரின் பணியாளரின் வீட்டில் இருந்து அமலாக்கத்துறை மலை மலையான பணத்தை பறிமுதல் செய்திருப்பதாக குறிப்பிட்ட பிரதமர், தனது வேலைக்காரரின் வீட்டை, கருப்பு பணத்தை பதுக்குவதற்கான கிடங்காக மாற்றிய கட்சி காங்கிரஸ் என விமர்சித்தார். இவ்வளவு பணம் பிடிப்படுவது இது ஒன்று முதன்முறை அல்ல என தெரிவித்த பிரதமர், கருப்பு பணத்தைப் பிடிப்பதால் எதிர்க்கட்சிகள் தம்மை அவதூறு செய்வதாக குறிப்பிட்டார். ஆனால் நான் ஏழை மக்களின் பணத்தைப் பற்றியே கவலைப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார்


Next Story

மேலும் செய்திகள்