காங்.-க்கு எதிராக கர்ஜித்த பிரதமர் மோடி

x

ஜார்கண்டில் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்திற்கு அனுப்ப காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருவதாக விமர்சித்தார். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவதாகவும் தெரிவித்த அவர், ஊழல் மற்றும் குடும்ப அரசியல் செய்து வரும் இந்தியா கூட்டணி கட்சிகளிடம் இருந்து நாட்டை விடுவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் ஆட்சியின் போது நக்ஸல் தீவிரவாதம் வளர்ச்சி அடைந்த நிலையில், தனது அரசு அதனை கட்டுப்படுத்தி வருவதாக தெரிவித்தார். இதை தொடர்ந்து, ஜார்க்கண்டில் பிரதமர் மோடி வாகன பேரணி நடத்தி, மக்களிடம் வாக்கு சேகரித்தார்.


Next Story

மேலும் செய்திகள்