தாதாக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் அவர்களின் சகோதரி தாக்கல் செய்த மனு - அரசு அளித்த உறுதி..

x

உத்தரபிரதேசத்தில் பிரபல தாதாவான அதீக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில், மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையினை தாக்கல் செய்துள்ளது.

உத்தரபிரதேச தாதாக்களான அதீக் அகமது மற்றும் அஷ்ரப் அகமது சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, அவர்களுடைய சகோதரி ஆயிஷா நூரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், தனது குடும்பத்தாரை பழிவாங்கும் நோக்கில் மாநில அரசு செயல்படுவதாகவும், இதனால் தனது சகோதரர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை ஓய்வு பெற்ற நீதியை கொண்டு விசாரிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து பதிலளிக்க கோரி கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி உத்தரபிரேதச அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்த உத்தரபிரேதச அரசு, விசாரணை நியாயமான முறையில் நடைபெறும் என உறுதி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்